• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மட்டக்களப்பில் உலக நாடக தின விழா 2017

உலக நாடக தின விழா 2017 ஆரம்ப விழா நேற்று (27) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அதன் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்றது.
 
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உலக நாடக தினத்தினைச் சிறப்பிக்கும் முகமாக கலங்துரையாடலும் நாடகங்களும் நடைபெறுகின்றன.
 
ஆரம்ப தின நிகழ்வு திங்கட்கிழமை காலைவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரி.ஜெயசிங்கம் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக மூத்த நாடகக்கலைஞர்களான க.பாலேந்திரா, திருமதி ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
ஆரம்ப நிகழ்வுகளை அடுத்து  எஸ்.பொ.அரங்கில் திங்கட்கிழமை மாலை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர் ஞா.ஜெயரஞ்சனியிள் நெறியாள்கையில் ஆரோடு நோகேன் , மற்றும் விரிவுரையாளர் தி.தர்மலிங்கத்தின் நெறியாள்கையில் கட்டவிழ்ப்பு ஆகிய நெடு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
 
போருக்கு முந்திய, போருக்குப்பிந்திய நாடகச் செயற்பாடுகளை எதிர்கால சந்தத்தியினருக்கு அறிமுகப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டு நாடக விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. 29ஆம் திகதி வரை நடைபெறும் உலக நாடக தின விழாவில் தினமும் காலையில் வட்டமேசை மாநாட்டுக் கலந்தரையாடலும், மாலை நேரங்களில் நாடகங்களும் இடம் பெறுகின்றன. இறுதி நாளில் பிரபல நாடக இசையமைப்பாளர் கண்ணன் மாஸ்ரின் அரங்கப்பாடல்கள் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த 3 நாட்களிலும் நிறுவகத்தின் விரிவுரையாளரகளின் நெறியாள்கையில் உருவான 8 நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
 
இன்று (28) திரவியம் இராமச்சந்திரன் அரங்கில், போர்க்காலத்து, போருக்குப்பிந்திய ஈழத்தமிழர் அரங்கு எனும் தலைப்பில் வட்ட மேசை மநாடு காலை 9.30 முதல் 12 மணிவரை நடைபெறவுள்ளது.
 
மாலை 5 மணிமுதல் 8 மணிவரை விரிவுரையாளர் க.மோகனதாசனின் நெறியாள்கையில் வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள் சிறுவர் நாடகம், உமா சிறிசங்கரின் நெறியாள்கையில் அடையாளம் குறுநாடகம், சி.துஜான், பெ.கோகிலவாணி ஆகியோரின் நெறியாள்கையில் கூர் குறுநாடகமும் அரங்கேறுகின்றன.
 
இறுதிநாளான 29ஆம் திகதி புதன்கிழமை அரசரெட்ணம் அண்ணாவியார் அரங்கில் காலை ஈழத்து நவீன அரங்கு இன்னும் இனியும் என்ற தலைப்பில் வட்ட மேசை மாநாடு நடைபெறும். மாலை 5 மணிமுதல் 8 மணிவரை விரிவுரையாளர் பா.கிருஸ்ணவேணி யின் நெறியாளர்கையில் வெள்ளை மனம் குறுநாடகம், கா.அற்புதனின் நெறியாள்கையில் எச்சங்கள் நெடு நாடகம் அகியன அரங்கேற்றப்படுவதுடன், பிரபல நாடக இசையமைப்பாளர் கண்ணன் மாஸ்ரின் அரங்கப்பாடல்கள் நிகழ்வு நடைபெறவுள்ளது.
 
அதே நேரம், இம் மாதம் 31ஆம் திகதி முதல் ஏப்ரல் 2ஆம் திகதி வரை உலக அரங்க விழா நிகழ்வுகள், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் மற்றும் கொழும்பு அரங்க விழாக்குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
 
இதில், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்களின் நெறியாள்கையில் உருவான வீரத்தாயும் அவளது பிள்ளைகளும், சவால், பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி ஆகிய 3 நாடகங்களும், இந்தியாவின் இமான் இமான் பாணி, இன் ரான்சிஸ்ட் ஆகிய நாடகங்களும், ஜேர்மனியின் ஒப்பிக்காசு எனும் நாடகமும் அரங்கேறவுள்ளன.
 
இந்த உலக அரங்க விழாவானது கொழும்பில் நடைபெறவுள்ள கொழும்பு அரங்க விழாவின் ஆரம்பநிகழ்வாகவும் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
IMG 0313
 
IMG 0364
IMG 0458
IMG 0527
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.