• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

டெங்கு பரவுதலை தடுக்க மட்டில் கடும் நடவடிக்கை

​டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் அரச நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சீல்
வைக்க நடவடிக்கை எடுப்பது  என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
 இன்று (27) காலை நடைபெற்ற அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பிரதேச சபைகள், மாநகர சபை உள்ளிட்ட பிரதேசங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே  இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், ஆர்.துரைரெட்ணம், கே.கருணாகரம், எம்.நடராஜா, சிப்லி பாருக் ஆகியோம் கலந்து கொண்டனர்.
 
இந்தக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி, டெங்கு பரவலானது; மிகவும் மோசமாக இருக்கிறது. அதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அபாயகரமான நிலை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை நாம் மிகவும் தீவிரமாகவும் துரிதமாகவும் எடுத்தாக வேண்டும்.
 
மாகாண சுகாதாரத்திணைக்களம், உள்ளுராட்சி சபைகள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மற்றும் அனைவரும் எடுத்தாக வேண்டும். உள்ளுராட்சி நிறுவனங்கள் இது குறித்து  மிகவும் விழிப்பாக இருப்பதுடன் பொது மக்களையும் விழிப்படையச் செய் வேண்டும்.
 
டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருக்கும் அரச நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றினை மூடுவதற்குரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுமாறும் இந்த விடயத்தில் தயவு தாட்சணியம் காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
 
மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இன்றைய கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ;.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
 
 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.