புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் அநுராதபுரம் அரச அதிகாரிகளை தௌிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று நேற்று (23) வடமத்திய மாகாண சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் முறை பற்றி பொதுமக்களை தௌிவுபடுத்துவதற்கான ஒருங்கிணைப்பு காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட இச்செயலமர்வில் சுமார் 500 அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை அறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேயநாயக்க, யாழ் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
அநுராதபுர மாவட்டச் செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.