டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை கண்டறிந்து சிரமதானங்களை மேற்கொள்ளும் முகமாக
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம் இன்று (22) நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாயும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நேற்று (21) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபை கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய இச்சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் மாகாண சபையின் தவிசாளர், மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர், முதலமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அக்கூட்டத்திற்கமைவாக, இன்று (22) காத்தான்குடியில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், இராணுவ வீரர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபையின் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
LDA_dmu_batti