இலங்கையின் முதலாவது பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவின் 65வது நினைவு தினம் இன்று (22) மாலை 4.00 மணிக்கு கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கருகில் நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ள இந்நினைவு தின நிகழ்வில், விசேட தர்ம போதனையை அக்கமஹா பண்டித்த மஹோபாத்ய, கொடுகொட தம்மவாச தேரர் ஆற்றவுள்ளார்.
கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவர்களினால் டி எஸ் சேனாநாயக்க நினைவு கீதம் இசைக்கப்படவுள்ளதுடன் மலர் பூஜையினை கொழும்பு மாநாகரசபை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.