உலக காசநோய் தின தேசிய நிகழ்வு சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் 24ம் திகதி காலை 7.30 மணிக்கு களுத்துறையில் நடைபெறவுள்ளது.
இம்முறை உலக காச நோய் தினம் இணைவோம் - காசநோயை ஒழிப்போம் என் தொனி்ப்பொருளில் உலக காசநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
களுத்தறை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகும் பாத யாத்திரையாக ஆரம்பமாகும் தேசிய நிகழ்வில் ஏனைய நிகழ்வும் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
2014ம் ஆண்டு இலங்கையில் நிலவிய காசநோய் தாக்கத்தை எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் 10 வீதத்தால் குறைப்பதே காசநோய் திட்டத்தின் நோக்கமாகும். இலங்கையில் காசநோயின் தாக்கத்தை குறைப்பதற்கு தேசிய திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மார்பு சிகிச்சை மத்திய நிலையங்கள் 26 நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
உலக சனத்தொகையில் 3/4 பகுதியினர் காச நோய் பற்றீரியாவினால் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர். எனினும் பற்றீரியா தொற்றுக்குள்ளான அனைவருக்கும் நோய் அறிகுறி தோன்றுவதில்லை. தொற்றுநோயினால் மரணிப்போரின் எண்ணிக்கையை நோக்கும் போது காச நோய் தொற்றுக்கி இறத்தல் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மட்டுமே இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலக சுகாதார தாபனத்தின் தரவுகளுக்கமைய, உலக சனத்தொகையில்10.4 மில்லியன் பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 61 வீதமானவர்கள் தென் பசுபிக் பிராந்திய மற்றும் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இலங்கையில் கடந்த ஆண்டு மட்டும் 13,757 பேர் காச நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 648 பேர் இறந்துள்ளனர். அதிக எண்ணிக்கையானவர்கள் மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலேயாகும்.
நேற்று (21) சுகாதார கல்வி காரியாலயத்தில் நடைபெற்ற காச நோய் தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தலைமையில் நடைபெற்றது. இதில் மாலைதீவில் தற்போது வேகமாக பரவும் இன்புளுவென்சா எச் 1 என் 1 தொடர்பில் கருத்து தெரிவித்தபோது, தற்போது மாலைதீவில் பரவி வரும் காய்ச்சல் எச் 1 என் 1 என்று அடையாளங்காணப்பட்டுள்ளது. இதனை தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு மற்றும் பொரளை ஆராய்ச்சி நிறுவனம் என்பன உறுதி செய்துள்ளன. கடந்த காலங்களில் கண்டி, பிபில, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இத்தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டனர். மாலைதீவில் இருந்து இலங்கை வந்த உல்லாச பிரயாணிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்திய பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுகின்றனர். இலங்கைக்கு வருவதை தடை செய்ய அவசியமில்லை என்று தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் பிரதி பணிப்பாளர் நாயகம் (பொது சுகாதாரம்) டொக்டர் சரத் அமுனுகம, காச நோய கட்டுப்பாட்டு மற்றும் தேசிய திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன உட்பட பல வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.