எதிர்வரும் 29ம் திகதி தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் டெங்கு அபாயம் தீவிரமடைந்துள்ளமையினால் டெங்கு நோய் பரவும் இடங்களை அடையாளங்கண்டு அழிக்கும் நோக்கில் இவ்வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
நாடு முழுவதிலும் உள்ள அரச, தனியார் நிறுவன கட்டிடங்கள், பாடசாலைகள், வீடுகள், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து இடங்களும் பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படவுள்ளதாகவும் அந்நடவடிக்கைக்கு பொலிஸார், முப்படையினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் அண்மையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுகாதார சேவை உதவியாளர்கள் 500 பேரும் இந்நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.