இலங்கையில் நடைபெறவுள்ள ஐநாவின் 14வது வெசக் தின விழாவில் கலந்துகொள்ளவுள்ள
பிரதானிகளுக்கான அழைப்பதற்காக நீதி மற்றும் பௌத்த அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச
ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் விசேட தகவலுடன் கம்போடியா, வியட்நாம், நேபாளம், லாஒசய மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுக்கு நீதியமைச்சர் விஜயம் மேற்கொண்டுள்ளார் என நீதி மற்றும் பௌத்த அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்போடியா, வியட்நாம், நேபாளம், லாஒசய மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள்,கலாசார மற்றும் சமய விவகார அமைச்சர்கள்,வெளிவிவகார அமைச்சர் மற்றும் உயர் மட்ட ராஜதந்திர அதிகாரிகளை இவ்விஜயத்தின் போது அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐநா வெசக் தின விழாவை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு மேற்கூறப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுவும் இலங்கை பௌத்த சமயத்தை சர்வதேச மட்டத்தில் பரப்புதற்கு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதும் இவ்விஜயத்தின் நோக்கமாகும்.
எதிரவ்ரும் மே மாதம் 12,13, 14ம் திகதிகளில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரசேதங்களில் நடைபெறவுள்ள ஐநா வெசக் தின கொண்டாட்டத்தின் பிரதான அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.