கூட்டுறவு மாகாண அமைச்சர்கள் மாநாடு 2017 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) நடைபெறவுள்ளது.
மாகாணசபைகள் அமைக்கப்பட்டவுடன் அரசின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு விடயம் தொடர்பில் தேசிய கொள்கையை உருவாக்கும் நோக்குடன் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
கைத்தொழில் மற்றும் வணிக அலுவர்கள் அமைசசர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அனைத்து மாகாண கூட்டுறவு அமைச்சர்கள், கூட்டுறவு விடயம் தொடர்பான அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.