தேசிய வெசக் விழா 2017 நிமித்தம் கேகாலை மாவட்டத்தை மையப்படுத்தி நடத்தப்படும் இரண்டாவது நடமாடும் சேவை நாளை (18) மாவனல்ல பெலிகம்மன புரான விகாரையில் நடைபெறவுள்ளது.
பௌத்த சாசன அமைச்சுடன் பௌத்த அலுவல்கள் அமைச்சு இணைந்து நடத்தும் இந்நடமாடும் சேவையை மாவனல்ல மாவட்டச் செயலகம் மற்றும் சாசன பாதுகாப்பச்சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்நடமாடும் சேவையின் போது பிக்குகளுக்கான அடையாள அட்டை, விகாரைகள் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு, தஹம் பாடசாலை பிள்ளைகளின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக தஹாம் பாடசாலை ஆசிரியர் சேவையில் உள்ள பிக்குகள் மற்றும் ஏனைய ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.