பாதுகாப்பான இலங்கை எனும் தொனிப் பொருளின் கீழ், மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன்கோயில் வீதி - தோணாவிற்கு வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17) காலை இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின 12.5 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இந்த வடிகான் அமைக்கப்படவுள்ளது.
இதன்போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மியனவல, மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு மேற்படி வடிகானுக்குரிய அடிக்கல்லை நட்டு வைத்தனர்.
இதன்போது பாதுகாப்பு அங்கிகளும் மீனர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
LDA_dmu_batti