உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் ரஷ்யா செல்லவுள்ளார் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க நேற்று (15) தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கலாச்சார புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது என்றும் இதற்காக வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.