நுகர்வோர் தின தேசிய மாநாடு 2017 இன்று (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
'டிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் உரிமைகள்' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டை வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 15ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக தேசிய நுகர்வோர் தினத்தில் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜோன் எவ்.கெனடி 1962ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி நுகர்வோர் உரிமைகளுக்கான பிரத்தியேக தினமொன்று அவசியம் என குறிப்பிட்டார். அவர் அமெரிக்கக் காங்கிரசில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய 1983ம் ஆண்டு மார்ச் 15ம் திகதி தொடக்கம் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்படத்தக்கது.