கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை கொடி பொருத்தப்பட்ட மசகெண்ணெய் கப்பல் தொடர்பில் அமைச்சிற்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த கப்பல் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குறித்த கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இல்லையென்பதும் அதில் 8 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கு கடற் பிரதிநிதித்துவ நிறுவனம், உரிய அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்படடுள்ள இலங்கை தூதுவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனால் குறித்த விடயம் தொடர்பில் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டவுடன் கப்பலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகையில் வெளியிடப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு