ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானிகளின் புதிய ஆய்வுகளின் பிரதிபலன்களை வெளியிடும் வருடாந்த சிறு ஏற்றுமதி பயிர் ஆராய்ச்சி மாநாடு 2017 ( SMEC – 2017 ) மற்றும் கண்காட்சி எதிர்வரும் 16ம் திகதி கண்ணோருவையில் ஆரம்பமாகவுள்ளது.
'பசுமை உலகுக்கான ஏற்றுமதி பயிர்கள்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாடானது, நாளை மறுநாள் (16) மற்றும் 17ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் 5.00 வரை நடைபெறவுள்ளது.
ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகேவின் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டை ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் ஆராய்ச்சி பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
இங்கு வெளியிடப்படும் ஆராய்ச்சி தகவல்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், உட்பட வர்த்தத் துறையினருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் முக்கியம் வாய்ந்ததாக இம்மாநாடு அமையும் என்றும் அவசியமான தகவல்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்றும் ஏற்றுமதி விவசாய திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.