ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் சில தினங்கள் எந்தவொரு இந்திய விஜயத்திலும் மேற்கொள்ள மாட்டார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஆன்மீக தலைவர் தலாய்லாமா அவர்களும் இந்திய பீஹார் மாநிலதில் புதிய நாலந்தா மகா விகாரை பல்கலைக்கழக நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர் என கடந்த வெள்ளிக்கிழமை ‘சிலோன் டுடே’ பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி தவறானது எனவும், எவ்விதத்திலும் உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்பட்டிருப்பதனால் அச் செய்தியை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி அடுத்துவரும் சில நாட்களில் எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.