இலங்கையில் பாவனையில் உள்ள ஐந்து மற்றும் ஒரு ரூபா நாணயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகத்தை மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
துறுபிடிக்காத பித்தளை மற்றும் கலப்பு உலோகங்களை பயன்படுத்தி (தங்க நிறத்தில்) முலாம் பூசப்பட்ட ஐந்து மற்றும் ஒரு ரூபா நாணயங்களில் துறுபிடிக்காத வெள்ளி நிற முலாம் பூசுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
ஐந்து ரூபா நாணயத்தின் விளிம்பில் இதுவரை இருந்த எழுத்துக்கள், பூ என்பவை துறுபிடிக்காத உலோகத்தை பயன்படுத்தி உருவாக்கப்படவுள்ள புதிய நாணயங்களில் நீக்கப்படவுள்ளன.
2005ம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட ஐந்து மற்றும் ஒரு ரூபா நாணயங்களில் காணப்பட்ட அளவு மற்றும் ஏனைய அலங்காரங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்றும் அந்நாணயங்கள் இலங்கையில் பயன்படுத்துவதற்கு செல்லுபடியாகும் என்பதுடன் அவை பயன்பாட்டில் உள்ள வரை மத்திய வங்கி பொறுப்பு கூறும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.