ஹிங்குரான்கொடை பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்பளிப்புக்களை வழங்கி நேற்று (11) பாராட்டினார்.
‘ஜனாதிபதி நில மெஹவர’ நடமாடும் சேவையின் ஒரு மீளாய்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே இம்மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
அண்மையில் பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஜனபதி நில மெஹவர’ நிகழ்ச்சித்திட்டத்தில் முன்மொழியப்பட்டமைக்கமைய இப்பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது
தொழில், தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் உள்ள மனிதவலு, தொழில்வாய்ப்பு திணைக்களமும் ஹிங்குரான்கொடை பிரதேச செயலாளர் அலுவலகமும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.