தகவல்களை மிகத் தௌிவாக வழங்குவதற்காக புகைப்படங்கள், காணொளிகள், சர்வதேச மாநாடுகள் மற்றும் சட்டங்கள் உட்பட பயனுள்ள தகவல்கள் இவ்விணையதளத்தில் உள்ளடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக அறிக்கை
- In Latest News
பிள்ளைகளின் பாதுகாப்புக்காய் இணையதளம்
பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அவசியமான வழிகாட்டல் மற்றும் தரவுகள் அடங்கிய இணையதளமொன்றை அறிமுகப்படுத்த இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரதிநிதித்துவ நிறுவனம் (ICTA) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதிநிதித்துவ நிறுவனம் ஆகியன இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இன்னும் சில வாரங்களில் குறித்த இணையதளம் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக அவசியமான தகவல்களை இவ்விணையதளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ICTA நிறுவனம் கூறியுள்ளது.
இன்றைய சூழலில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகம், பாதிப்புக்களில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதுடன் அதற்கான பொறிமுறைகள் தொடர்பிலும் இவ்விணையளத்தில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.