உத்தேச ருவன்வெல்ல நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை (10) நடைபெறவுள்ளது.
நீதிமன்ற மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவுள்ளது.
275 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் மாவட்ட அரசியல் தலைவர்கள், நீதிமன்றதுறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.