'நாட்டுக்காக மலரும் புலதிசி யௌவனய' இளைஞருக்கான பயிற்சிப் பாசறை எதிர்வரும் 10,11,12 ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்
பொலன்னறுவை ரோயல் கல்லூரி மாணவ மாணவிகள் 3000 இப்பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளனர். இப்பயிற்சி பாசறையில் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வு மற்றும் பயிற்சியை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
மேற்படி பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் கிராமிய மட்டங்களில் ஏனையோருக்கு குறித்த விடயம் தொடர்பில் பயிற்சிகளை வழங்குவர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வரசாங்கம் இளைஞர் யுவதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறது. அவர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சி மத்திய நிலையங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இணைஞர் படையணி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மட்டும் தொழிலற்ற பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகளில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன் மேலதிகமாக சுயதொழில் வாயப்புக்களை வழங்க சுவசக்தி நிதி வழங்கல் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
சமூகத்தில் விசேடமாக கிராமங்களில் மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை முன்னெடுப்பதற்கும் அதற்கான உணவுவகைகளை தெரிவுசெய்வதிலும் உற்பத்தி செய்வதிலும் மக்களை ஊக்குவிப்பதற்கு இளைஞர்கள் சுயேட்சையாக செயற்படுவதை ஊக்குவிப்பதே இதன் மற்றுமொரு நோக்கமாகும்
இதுதொடர்பாக நடைபெறும் இந்த முகாமில் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோய் தொடர்பாகவும் இளைஞர்களுக்கு விளக்கமளிக்கப்டவுள்ளது ஜனாதிபதி போதை பொருள் பாவனை ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் டொக்டர் சமந்த குமார கிதலவ ஆராய்ச்சி தெரிவித்தார்.
நாட்டின் மொத்தமக்களில் 25 சதவீதமானோர் இன்னும் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உழைக்கும் பாட்டாளி மக்கள்.
.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி போதை பொருள் பாவனை ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் டொக்டர் சமந்த குமார கிதலவ ஆராய்ச்சி மற்றும் பொலன்னறுவை மாவட்ட ச் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.