இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாடு இன்று (07) முற்பகல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஆரம்பமானது
இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பேண்தகு மற்றும் சமநிலையான அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார்.
மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இந்தோனேசியா ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ (Joko Widodo) வரவேற்றார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தைச் சேர்ந்த 21 நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் இம்மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.