சர்வதேச மகளிர் தினத்தை முன்னிடடு பெண் சுயமுயற்சியாளர்களின் விற்பனைச் சந்தை இன்று (07) மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இவ்விற்பனைச் சந்தையானது நாளையும் (08) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை சர்வதேச மகளிர் தினம் 'முக்காலத்தையும் காண்பவள் வலுகொண்டு வெல்பவள்' என்ற தொனிப்பொருளில் நாளை (08) தேசிய மகளிர் தின கொண்டாட்டம் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள இத்தேசிய நிகழ்வில் சுமார் இரண்டாயிரம் பெண்கள் வரை கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் மாத்தறை மாவட்டச் செயலக வளாகத்தில் சுவனாரி சுகாதார செயற்றிட்டமொன்றும் இன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.