விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய பயிற்றுவிப்பாளர்களுக்கான மாதாந்த போஷாக்கு கொடுக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
எதிர்வரும் 2020 ஒலிம்பிக் போட்டி, 2017 ஆசிய தடகளப் போட்டி, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் பொது நலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொள்வதற்கு தெரிவு செய்யப்பட்ட 25 விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய பயிற்றுவிப்பாளர்களுக்கே இம்மாதாந்த போஷாக்குக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேககரவினால் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதான கேட்போர்கூடத்தில் நடந்த நிகழ்வின் போது இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.