உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வன சீவராசிகள் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்த நபர்கள் மற்றும் அதிகாரிகளை கௌரவிக்கும் சேவாப்பிரஷாதினி விருது வழங்கல் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 10 அதிவிசேட வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
இதன்போது வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னமொன்றை வழங்கி கௌரவித்தார்.
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் பிரதியமைச்சர் சுமேதா ஜீ ஜயவிக்ரம, அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.பீ.டி மீகஸ்முல்ல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.