நாட்டின் 15 மாவட்டங்களில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 1,80,000 குடும்பங்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நேற்று (02) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தண்ணீர் பௌசர்களை பகிர்ந்தளித்தார்.
கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்றலில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் போதே இத்தண்ணீர் பௌஸர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஜனாதிபதியிடமிருந்து தண்ணீர் பௌசர்களைப் பெற்றுக் கொண்டனர்.
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 200 தண்ணீர் பௌசர்கள் வழங்கப்படவுள்ளதுடன் நேற்று இதன் அடையாளமாக 25 தண்ணீர் பௌசர்கள் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாவட்ட அரசாங்க அதிபர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்
வரட்சி தொடர்பான ஜனாதிபதியின் செயலணியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி செயலகம் நேற்று தண்ணீர் பௌசர்களை கொள்வனவு செய்துள்ளது. 2.5 மில்லியன் ரூபா இதற்கு செலவிடப்பட்டுள்ளது.