வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் அல்போன்ஸோ தாஸ்ட்டின் குசேடோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) ஜெனீவாவில் இடம்பெற்றது.
ஐநா மனித உரிமைப் பேரவையின் 34வது அமர்வில் கலந்துகொள்ள ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அங்கு ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது முதலீடு, வர்த்தக அபிவிருத்தி ஆகிய துறைகளில் இரு தரப்பு தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சருக்கு அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்தார்.
அத்துடன் இலங்கையில் ஸ்பெயின் உயர் ஸ்தானிகராலயம் நிறுவுவ எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இலங்கை பெற்றுக்கொள்வதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.