சமய சிந்தனை, இலக்கியம், கலை போன்ற அனைத்துத் துறைகளினதும் ஒருமைப்பாட்டுடன், ஒன்றிணைவு மற்றும் சகவாழ்வினுள் ஆன்மீக விடுதலையை எதிர்பார்க்கும் மகா சிவராத்திரி தினமானது, இந்து பக்தர்களைப்
போன்றே அனைத்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியதாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வௌியிட்டுள்ள சிவராத்திரி தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மகா சிவராத்திரி இந்து பக்தர்களுக்கு போன்றே அனைத்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியதாகும். சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான இரவாக சிவராத்திரி கருதப்படுகிறது. மகா சிவராத்திரி தினத்தை குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என அனைவருடனும் ஒன்றிணைந்து, ஒரே மனதுடன் மகிழ்ச்சியாகக் கெண்டாடுவது இந்து பக்தர்களின் வழக்கமாகும்.
இத்தினத்தில் உபவாசம், தியானம் மற்றும் சிவபெருமானை வணங்குதல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து புண்ணிய கருமங்களில் ஈடுபட்டு, அர்த்தபூர்வமாக அதனைக் கழிப்பதன் ஊடாக ஆன்மீக விடுதலை கிடைக்கும் என்பது இந்து பக்தர்களின் நம்பிக்கையாகும். சிவபெருமானின் நடனம் இடம்பெற்ற தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரியில் இந்து கலாசார, கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உலகவாழ் அனைத்து இந்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான மகா சிவராத்திரி தினமாக அமையட்டும் என உளப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.