உலகின் சிறந்த 25 துறைமுகங்கள் பட்டியலில் இலங்கைத் துறைமுகமும் உள்வாங்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்பாலைனர் 2017 வகைப்படுத்தலுக்கமைய உலகின் சிறந்த 25 துறைமுகங்களில் 23வது இடத்தில் இலங்கை துறைமுகம் இடம்பிடித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு 26வது இடத்தில் இருந்த இலங்கைத் துறைமுகம் மூன்று இடங்கள் முன்னோக்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துறைமுகத்தினுல் சிறந்த வர்த்தகத்திற்கு ஏற்ற வகையிலான சூழ்நிலைக் காணப்படுவதே இதற்கான காரணம் என்று துறைமுகம் மற்றும் கப்பல் வளத்துறை அமைச்சர் அர்ஜுன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு மேலதிகமாக தனியார் பிரிவினரும் இலங்கை துறைமுகத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் இவர்கள் தனித்தனியே பணியாற்றினர். தற்போதைய அரசின் கீழ் அனைவருக்கும் பொதுவான வர்த்தக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் முன்வைத்துள்ள பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் உலகின் சிறந்த 20 துறைமுகங்கள் பட்டியலில் இலங்கையும் இடம்பெறும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்த அமைச்சர் இன்று (23) துறைமுக ஊழியர்களை சந்தித்து அனைத்து செயற்பாடுகளின் போதும் ஒழுக்கத்தை கடைபிடித்தமையினால் உலகின் சிறந்த துறைமுகப்பட்டியில் இலங்கை இடம்பிடித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.