ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுற்றாடலை பாதுகாத்து பொருளாதாரத்தை மேம்படுத்தி மின்சாரத்துறை எவ்வாறு மேம்படுத்து என்பது தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கக்கூடிய இடங்களை திட்டமிடல், நீர் மின்னுற்பத்தியையடுத்து அடுத்த கட்டமாக பாரியளவு காற்று மின்னுற்பத்தியில் கவனம் செலுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் பொறியிலாளர் சங்கத்தினர் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கை மின்சாரசபையின் திட்டமிடலானது குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எதிரானவையாக உள்ளதாகவும் இதனால் அவ்வுற்பத்தி நிலையங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பிலும் பொறியியலாளர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
மேலும் துறைசார் அனுபவம் மிக்க சக்திவலு விசேட நிபுணர்களுடைய கருத்துக்களுக்கு காதுகொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர் சங்க அதிகாரிகள் சங்கத்தின் நீண்ட கால திட்டத்தையும் முன்வைத்தனர்.
இச்சந்திப்பின் போது மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்த வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.எம்.எஸ் படகொட, இலங்கை மின்சாரபையின் தலைவர் டப்ளியு.டி.எஸ் விஜேபால உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.