இளைஞர் மற்றும் பெண்களை இலக்காக கொண்டு நடத்தப்படும் மூலோபாய முறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான இரண்டு நாள் செயலமர்வொன்று ஒன்று நாளை (14) பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
நிலையான அபிவிருத்தியை நோக்காக கொண்டு நடத்தப்படும் இக்கலந்துரையாடலானது நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு பிரதியமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன தலைமையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பெண்கள் மற்றும் இளைஞர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் இச்செயலமர்வானது நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் வழிகாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள், சிறுவர்கள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.