இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக 'சமிஞ்சை மொழி'யை பிரகடனப்படுத்துவதற்கான 'சமிஞ்சை மொழி சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க முன்வைத்த கோரிக்கைக்கு கடந்த நேற்று முன்தினம் (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
'அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் மூலம் 'சமிஞ்சை மொழியானது' விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.