ஐக்கிய நாடுகள் சபையின் 72வது மாநாடு கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் மூன்றாவது அமர்வு இதுவாகும்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் எதிர்வரும் 19ம் திகதி வரை ஐநா அமர்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐநா தலைமையத்தில் இவ்வமர்வு இடம்பெறவுள்ளதுடன் இம்முறை மக்களை நோக்கிய முக்கியத்துவம், உலகில் அனைவருக்கும் அமைதியான வாழ்க்கை என்ற தொனிப்பொருளில் 72 மாநாடு நடத்தப்படுகிறது.
நேற்று (12) ஆரம்பமான ஐநாவின் 72வது மாநாடு எதிர்வரும் 25ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.