இணையதள பாதுகாப்பு தொடர்பாக காலி மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு அதிகாரிகளை தௌிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (11) தேசிய பாதுகாப்பு அதிகாரசபையினால் ஹோல் டி கோல் அரங்கில் நடைபெற்றது.
இச்செயலமர்வில், காலி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அனைத்து சிறுவர் அபிவிருத்திகள் கலந்துகொண்டனர்.
கடந்த 10 -17 வயது பிள்ளைகளில் 19 சதவீதமானவர்கள் இணையதளத்தில் பாலியல் ரீதியான புகைப்படங்களை பார்ப்பதாகவும் குருணாகல, கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நீர்கொழும்பு, ஆகிய பிரதேசங்கள் அதிக இணையதள பாவனையுடைய பிரதேசஙகளாக அடையாளங்காணப்பட்டுள்ளது என்று சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மரினித லிவேரா தெரிவித்தார்.