கடந்த 24 மணி நேரமாக பெய்த மழையின் காரணமாக இரத்தினபுரி, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிய ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (07) தொடர்ச்சியாக பெய்த மழை 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை பெய்தமை காரணமாக பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணி நேரத்திற்கு இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.