விளையாட்டு பயிலுனர் நேர்முக பரீட்சைக்கு கடிதங்கள் தாமதாக கிடைத்த விளையாட்டு பயிலுன விண்ணப்பதாரிகள் தங்களது கடித்துடன் 08.09.2017 அன்று நடைபெரும் நேர்முக பரீட்சைக்கு சழூகமளிக்கலாம் என்று என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு நியமிக்கபட இருக்கும் 3850 விளையாட்டு பயிலுனர்களுக்கு தற்போது நேர்முக பரீட்சை கல்வி அமைச்சில் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் இதற்கு விண்ணபித்த விண்ணப்பதாரிகளுக்கு நேர்முக பரீட்சை தினத்திற்கு பின்னர் கடிதங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக எங்களுக்கு முறைபாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.
இதனால் இவர்களுக்கு கடித்தில் குறிபிட்டிருந்த ஆவணங்களுடன் சழூகம் தர முடியாமல் போயூம் உள்ளது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 08.09.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெரும் நேர்முக பரீடசைக்கு கலந்துக் கொள்ள முடியூம்.
குறிப்பாக மலையகம் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு கஷ்ட பகுதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. காரணம் தபால் வினியோகத்தில் ஏற்பட்ட தாமதமும் அதி கஸ்ட்ட பிரசேங்கள் என்பதால் ஆகும்.
எனவே இவர்களுக்கும் உரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளது. எனவே இச் சந்தர்ப்பத்தை விண்ணப்பதாரிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மீண்டும் ஒரு தினம் வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
LAD_dmu_batti