சிறுவர் செயலகம் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்துள்ள 'அருண தகின ரடா' ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 11ம் திகதி மஹாரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாலர் பாடசாலை சிறுவர்களுடைய ஓவியங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாந்தனி பண்டார தலைமையில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 3, 4 வயது பிள்ளைகள் 500 பேருடைய ஓவியங்கள் காடசிப்படுத்தப்பட்டுள்ளன. அப்பிள்ளைகளுக்கான பரிசளிப்பு விழாவும் அன்றைய தினம் மாலை 2.00 இடம்பெறவுள்ளது.
பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்தும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.