'களன மித்துரு - பொத் சுமித்துரு' பாடசாலை மாணவர்களுடைய வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகிறது.
தேசிய வாசிப்பு மாதம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்தின் அபிவிருத்தி மற்றும் விசேட திட்டங்கள் பிரிவினூடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆரோக்கியமான குழந்தைக்கு அறிவு போன்றே இலக்கிய இரசனையையும் ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக நாட்டில் உள்ள உயர்தரத்துடன் கூடிய 2820 பாடசாலைகளில் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் போட்டிகள் நடத்தப்பட்டு புத்தக வாசிப்பை பிள்ளைகள் மத்தியில் வளர்ப்பதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.