நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான வைத்திய உபகரணங்கள் வழங்கப்படும் போது நவீன தானியங்கி இயந்திரங்களை வழங்குமாறு சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பிரதான மருத்துவமனைகளுக்கு அவசியமான MRI மற்றும் CT SCANNER இயந்திரங்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவ்வியந்திரங்களை எதிர்வரும் 2018ம் ஆண்டில் அவ்வியந்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்துடனான கலந்துரையாடல் ஒன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு அவசியமான Linear accelerator இயந்திரங்களை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இச்சங்கத்தின் வருடாந்த அமர்விற்காக அபிவிருத்தி நிதியத்தின் நிதியத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துகளை இறக்குமதி செய்வது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அவசியமான மருந்துகளின் விபரங்கள் அடங்கிய பட்டியலை சுகாதார அமைச்சுக்கு வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார். எவ்வித தட்டுப்பாடுமின்றி புற்று நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கப்படுவதாக மருத்துவர்கள் இதன்போது அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர உட்பட அதிகாரிகள், இலங்கை புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் தமந்தி பீரிஸ் உட்பட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.