தூரநோக்கு 2025 'வளமான நாடு' (V 2025) என்ற அடுத்த எட்டு வருட காலத்திற்கான இணக்கப்பாட்டு அரசாங்கம் வகுத்த பொருளாதாரக் கொள்கை இன்று (04) வெளியிடப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இப்பொருளாதார கொள்கை வௌியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.