நாட்டின் சகல மாகாணங்களிலும் உள்ள ஒழுக்கமான சாரதிகளை தெரிவு செய்து பரிசளிக்கும் திட்டம் ஒன்றை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
இத்திட்டம் நடைமுறைப்படும் பிரதேசங்களில் வீதி ஒழுங்குகளை பேணி வாகனம் செலுத்தும் சிறந்த சாரதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
தெரிவு செய்யப்படும் சிறந்த சாரதிகளின் விபரங்கள் பெறப்பட்டு சன நெருக்கடியில்லாத பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஏ.எம்.டப்ளியு பீட்ஸ் டொப் நிறுவனம் கண்டியில் 300 சாரதிகளின் வாகனங்களை இலவசமாக பரிசோதனை செய்து 3000 ரூபா வவுச்சரும் வழங்கியுள்ளது.
கொழும்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். தெரிவு செய்யப்படும் சிறந்த சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, பிரதான மருத்துவமனைகளில் கட்டணக் குறைப்பு, ஹோட்டல் சிற்றுண்டிகளில் கட்டணக்குறைப்பு என பல சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.
கண்டியில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தினூடாக குருதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த நளீன் பண்டார என்ற நபர் வாய்ப்பினை பெற்றார். பொலிஸார் தொடர்பில் அவதூறான விடயங்கள் பரப்பப்படும் இத்தகைய சூழ்நிலையில் இவ்வேலைத்திட்டம் சிறந்தது என்கிறார் நளீன் பண்டார.