தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்திய நடமாடும் சேவை நேற்று (03) காலை 8.30 முதல் மாலை 3.30 மணிவரை களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது இறப்புஇ பிறப்புஇ விவாகச்சான்றிதழ்கள், அரச காணி, கமநல சேவை, சட்ட உதவி ஆணைக்குழுஇ அடிப்படை மனித உரிமைகள், ஓய்வூதியம், நீர்இ மின்சாரம் உள்ளிட்ட 25 வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவையில் 17 அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் பங்குபற்றியது.
இதன் ஆரம்ப நிகழ்வில்இ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி.எம்.ஈ.விக்கிரமசிங்க, உதவிச்செயலாளர் சந்திரிகா ரூபசிங்க, கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல ரங்கரெத்தின தேரர், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், மாகாணக் காணிப் பதிவாளா; க.திருவருள் அமைச்சரின் செயலாளா் அரச உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் தமது ஆவணங்களைத் தொலைத்த மக்களுக்காக அரச கரும மொழிகள் அமைச்சினால் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு இறப்புச் சான்றிதழ் பொலிஸ் ஆவணப்பிரிவு காணி பதிவுப் பத்திரம் என பலதரப்பட்ட சேவை நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டிருந்தன. இதில் பெருமளவிலான பொதுமக்கள் நன்மையடைந்தனர். இந்த நடமாடும் சேவையில் பொது மக்களின் 589 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
LDA