புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் 50 குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கையை வடிகாலமைப்பு மற்றும் நீ்ர் வள முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வறட்சி நிலவும் பிரதேசங்களில் துரித கதியில் இக்குழாய் கிணறுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் சுமார் 300,000 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மேற்கொண்டுள்ளன.
ஆனைமடு பிரதேச செயலக பிரிவில் மட்டும் சுமார் 10,000 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வறட்சி காரணமாக காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவற்றின் நன்மைக்காக செயற்கை கிணறுகள் மற்றும் நீர் நிலைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.