கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்கள் மற்றும் அதற்கு வௌியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என் பஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
குழப்பம் விளைவிக்கும் மாணவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுடைய பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என்று பரீட்சை ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தௌிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நடவடிக்கை தொடர்பான மேலதிக விபரங்களை, 0112784208, 0112784537/0113188350/0113140314 என்ற பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் பிரிவுக்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
தொலை நகல் இலக்கம்- 0112784422