தேசிய சந்தையில் அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் இருந்த ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இந்தியாவில் இருந்த இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 70,000 மெற்றிக்தொன் நாட்டரிசி, 30,000 மெற்றிக் தொன் சம்பா அரசி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில் இறக்குமதி செய்யப்படும் என்றும் மிகுதி 30,000 மெற்றிக் தொன் சம்பா அரிசி செப்டெம்பர் மாத இறுதியில் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி முதல் அரிசி கட்டுப்பாட்டு விலை அகற்றப்பட்டதுடன் தேசிய சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்கி அரிசி விலை அதிகரிக்கப்பட்டு நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நிலையை இல்லாமல் செய்யும் நோக்கில் இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.