• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ஊடக அறிக்கை 643/2022

08.09.2022 ஊடக அறிக்கை 643/2022

08.09.2022
பிரதம ஆசிரியர்/செய்தி ஆசிரியர்
பணிப்பாளர் (செய்தி)/செய்தி முகாமையாளர்/இணையத்தள ஆசிரியர்

அறிவித்தல் இல: 643/2022
வெளியிடப்பட்ட நேரம்: 14.00

ஊடக அறிவித்தல்

திரு. தினித் சிந்தக கருணாரத்ன புதிய அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்

சிரேஷ்ட ஊடகவியலாளரான திரு. தினித் சிந்தக கருணாரத்ன அரசாங்க தகவல் திணைக்களத்தின், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக இன்று (08) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

விஜய பத்திரிகை நிறுவனத்தின் லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த திரு. தினித் சிந்தக கருணாரத்ன, வெகுசன ஊடகத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிக காலம் இணை செய்தி ஆசிரியர் உள்ளிட்ட பல பொறுப்புவாய்ந்த பதவிகளில் சிறந்த அனுபவங்களைக் கொண்ட ஊடகவியலாளராவர்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவனாகிய புதிய பணிப்பாளர் நாயகம், உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரியாவதுடன், அமெரிக்காவின் கலிபோனியா சென்ரா மொனிகா பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பற்றிய உயர்கல்வியையும் பெற்றுள்ளார். திரு. தினித் சிந்தக கருணாரத்ன உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்தளவு அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

புதிய தகவல் பணிப்பாளர் நாயகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. அனூஷ பெல்பிட, முன்னாள் தகவல் பணிப்பாளர் நாயகம் திரு. மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அலுவலர்களும், வெகுசன ஊடக துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் காணொளி மற்றும் புகைப்படங்களை கீழ்க்காணும் இணையத்தள இணைப்பு மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

 https://www.vishmithacloud.com/s-r4ywC3Ga 


எம்.ஜீ.ஜயதிஸ்ஸ
பணிப்பாளர் (செய்தி)
அரசாங்க தகவல் திணைக்களம்

06 min 1 1

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

Cabinet Decisions - 05.08.2024

06 August 2024

Decisions taken at the Cabinet Meeting conducted on...

Cabinet Decisions - 29.07.2024

30 July 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.