ஹந்தான சூழல் பிரதேசத்தை பாதுகாப்பது தொடர்பில் பொது மக்களை தெளிவுபடுத்துவதற்கான சுவரொட்டிகளை ஒட்டும் நிகழ்வு நாளை (10) காலை 10.00 மணிக்கு ஹந்தான தப்போத்தாராம விகாரையில் நடைபெறவுள்ளது.
பிரதி சுற்றாடல் அமைச்சர் அநுராத ஜயரத்னவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வினூடாக பிரதேசவாசிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளினால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை மட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.
அறியாமையினால் பல்வேறு சுற்றாடல் பாதிப்புகள் ஏற்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய சுற்றுலாப்பிரயாணிகளின் கவனத்தை கவர்ந்துள்ள ஹந்தான மலை பிரதேசத்திற்கு நாளாந்தம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு செல்லும் சுற்றுலாப்பயணிகள் அறியமையின் காரணமாக பல்வேறு இவ்வழகிய சூழல் தற்போது பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பிரதேசவாசிகளாலும் இப்பிரதேசத்திற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று மத்திய சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது..
இந்நிகழ்விற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி மற்றும் கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம்.பி. ஹிட்டிசேக்கர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.