• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

வரட்சி நிலைமையை ஆராயும் விசேட கூட்டம்

வரட்சி நிலமை காரணமாகப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அனர்த்து முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன் தலைமையில் நேற்று (05) மாலை நடைபெற்றது.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலைமையை எதிர் கொள்ளல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைவாக மேற்படி வரட்சியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வரட்டிப்பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்காலத்தில் ஏற்படவுள்ள குடிநீர்த்தட்டுப்பாட்டை எதிர் கொள்ளல், விவசாயங்களுக்கு வழங்கவேண்டிய நீர்ப்பாசனம், மாவட்டத்தின் தற்போதைய நீர்க் கொள்ளளவு சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.
 
அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்ற நீர்ப்பாசனம், நீர்வழங்கள், உள்ளுராட்சி, உள்ளிட்ட திணைக்களங்களிடம் வரட்சியை எதிர் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
 
மாவட்டத்தின் குடிநீர்த்தட்டுப்பாட்டை எதிர் கொள்ளும் வரைகயில் உள்ளுராட்சிதச் சபைகளுக்கான நீர் விநியோக வவுசர்களின்இருப்பு மேலதிக தெவைகளுக்கான கொள்வனவுகள், நீர்த்தாங்கிகள் வழங்குதல், நிவாரண உதவிகள், சமைத்த உணவுகள் வழங்குதல், வாழ்வாதார உதவிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன் போது ஆராயப்பட்டன.
 
அத்துடன், காலநிலை மாற்றம் காரணமாக ஏற்திர்பார்க்கப்பட்ட மழை கிடைக்காததனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் இக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது
 
இந்த விசேட கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மட்டக்களப்பு மாவட்ட  உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா ஆகியோர் பங்கு கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், உள்ளுராட்சித் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.