போதை பொருள் தொடர்பில் ஊடக அறிக்கையிடலின் போது ஏற்படும் சிக்கல்களை குறைத்து எவ்வாறு அறிக்கையிடுவது என்பது தொடர்பில் ஊடகவியலாளரை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று இன்று (29) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.
இச்செயலமர்வில் அபாயகரமான ஔடதங்கள் மற்றும் சட்டவிரோத போதை பொருள் பாவனை என்பவற்றின் நிகழ்கால நிலைமை, அதன் அபாயகரமான எதிர்விளைவுகள் என்பன தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளன.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்ர பெர்ணாண்டோ தலைமையில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் இச்செயலமர்வு நடைபெறுகிறது.
இச்செயலமர்வை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.