• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு விளக்கமளிப்பு

காணாமல்போனோருக்கான சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கிழக்கு வலய உதவிப் பணிப்பாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று  (26)   மாலை நடைபெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில், கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள் விளக்கங்களை வழங்கினார்.
 
இக் காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கல் குறித்துக் கருத்துத் தெரிவித்த கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள்,
 
மட்டக்களப்பு மாவட்ட 14  பிரதேச செயலாளர்  பிரிவுகளில் கடமையாற்றும்  கிராம சேவை  உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இச் செயலமர்வில் காணப்படாமைக்கான சான்றிதழ்களை வழங்குதல் தொடர்பான விடயங்கள், காணப்படாமைக்கான  சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன என்றார்.
 
LDA_dmu_batti
 
அதே நேரம், ஏற்கனவே கடந்த வாரத்தில் பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள், பதிவாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இது போன்றதொரு செயலமர்வு ஏற்கவே நடத்தப்பட்டிருந்தது.
 
காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பது நல்லிணக்கச் செயற்பாட்டின் முக்கியமானதொரு விடயப்பரப்பென்பதும். வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
 
தற்போது 2010 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இறப்புப் பதிவுசெய்தல் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதிலுள்ள குறைபாடுகளை நிவர்ததிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையும்  கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான இறப்புப்பதிவினை 3348பேர் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.